ஆரம்பத்தில் வேகமாக இயங்கிய கணணி சிறிது நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது மந்த கதியில் இயங்குகின்றதா?
இதற்கு பல காரணங்கள் இருப்பினும் பொதுவாக நாம் கணனியில் நிறுவும் மென்பொருள்கள் Start Up இல் சேர்க்கப்படுவதால் கணனியின் வேகத்தில் பெரிதும் பாதிப்பு ஏற்படுகின்றது.
அதாவது நீங்கள் கணனியில் நிறுவும் பெரும்பாலான மென்பொருள்கள் கணணி துவங்கும் போது அதனுடன் இணைந்தவாறு செயற்பட துவங்குகின்றது. எனவே கணணி துவங்குவதட்கே அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றது.
எனவே இது போன்ற மென்பொருள்கள் கணணி துவக்கத்தின் போது துவங்குவதனை நிறுத்திவிட்டால் உங்கள் கணனியின் வேகத்தில் முன்னேற்றத்தை காணலாம்.
● இதற்கு Run சென்று msconfig என தட்டச்சு செய்க.
● பின் திறக்கப்படும் சாளரத்தில் Startup எனும் Tab இனை சுட்டுக
● இனி அதில் கணணி துவக்கத்தில் துவங்கும் மென்பொருள்களின் பட்டியல் தரப்பட்டிருக்கும்.
● அதில் தேவையற்ற மென்பொருள்களுக்கு முன்னே இருக்கும் Tick அடையாளத்தினை நீக்கி விட்டு Apply செய்து Ok அலுத்துக.
அவ்வளவு தான்..!
I have learned more from you.
ReplyDeletehappy to hear that Sajanthan
ReplyDeletei need to know cluster concepts
ReplyDelete